Thursday 26 January 2012

மரண சிந்தனை


நீங்கள் எங்கே இருந்த போதும் மரணம் உங்களை அடையும். உறுதியான கோட்டையில் நீங்கள் இருந்தாலும் சரியே.... “  (திருக்குர்ஆன் 4.78)

உங்களின் அழகிய செயலுக்குரியவர்கள் யார் என்பதைச் சோதிப்பதற்காக மரணத்தையும், வாழ்வையும் அவன் படைத்தான், அவன் மிகைத்தவன்; மன்னிப்பவன்.”   (திருக்குர்ஆன் 62:2)

உங்களை தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.

ஒரு மனிதன் உலகில் பிறந்து, அல்லாஹ்வும், ரசூல்(ஸல்) அவர்களின் கட்டளைப்படி நல்லவனாக வாழ்ந்தால் அவனுடைய மரணத்திற்கு பிறகு அவனுக்கு ஏற்படும் நிலையும், அதைப் போல் அல்லாஹ் ரசூல் (ஸல்) கட்டளைக்கு மாற்றமாக நடந்து கெட்டவனாக வாழ்ந்தால் அவனுடைய மரணத்திற்கு பிறகு அவனுக்கு ஏற்படும் நிலையும் இஸ்லாம் பின்வருமாறு கூறுகிறது.

கெட்டவர்களின் உயிர் பறிக்கப்படும் முறை :
அவர்கள்(மரணிக்கும் போது) அவர்களுடைய முகங்களிலும், அவர்களுடைய பின் புறங்களிலும் அடித்தவர்களாக மலக்குகள் உயிர்களைக் கைப்பற்றுவார்கள். (திருக்குர் ஆன் 47:27)
நபி(ஸல்) கூறினார்கள்  : கெட்டவர்களின் உயிரை கைப்பற்றும் வானவர்கள் அவனது தலைப்பக்கம் வெறுப்பிலும் கோபத்திலும் வெளியேறு என்று கூறுவார்கள். அப்போது அந்த உயிர் ஈரமான கம்பளியை முள்ளில் போட்டு இழுப்பது போன்ற கடுமையான வேதனையுடன் பிடுங்கப்படும். (அவனுடைய நரம்புகளும், எலும்புகளும் தெறித்து விடுவது போன்ற வேதனை ஏற்படும்.)
நல்லவர்களின் உயிர் பறிக்கப்படும் முறை :

நல்லவர்களின் உயிரை கைப்பற்றும் வானவர்கள் அவனது தலைப்பக்கம் அமர்ந்து கொண்டுநல்ல ஆத்மாவே அல்லாஹ்வின் மன்னிப்பிலும், பொருத்தத்திலும் வெளியேறுவாயாக! என்று கூறுவார்கள். உடனே அவ்வடியானின் உயிர் தண்ணீர் பாத்தரத்தில் இருந்து தண்ணீர் விழுவதைப் போன்று (எவ்வித கஷ்டமின்றி) வெளியேறிவிடும்.” ( நூல் : அபூதாவூது. நஸயி,அஹமது, ஹக்கிம்.)

கெட்டவர்களின் உயிரின் நிலை :
கெட்டவர்களின் உயிர் பிடுங்கப்பட்டவுடன் செத்த பிணங்களின் நாற்றத்தை விட கடுமையான நாற்றம் வெளிப்படும் என்று நபி(ஸல்) கூறிவிட்டு தனது மேலாடையை எடுத்து தனது மூக்கை பொத்திக் கொண்டார்கள். பிறகு கம்பளியில் சுருட்டப்பட்ட அந்த உயிரை மலக்குகள் முதலாவது வானத்திற்கு கொண்டு செல்லப்படுவார்கள். வானத்தில் உள்ள மலக்குகள்இந்த கெட்ட வாடையுடைய உயிர் யாருடையது என்று கேட்பார்கள்உலகில் வாழ்ந்த ஒரு கெட்டவனுடைய உயிர் இது என்று கூறுவார்கள். தொடர்ந்து வானத்தை திறந்து விடுமாறு கூறுவார்கள். அவனுக்கு வானம் திறக்கப்படமாட்டாது. என்று கூறிய நபி(ஸல்) பின்வரும் இறைவசனத்தை ஒதினார்கள்.
எவர்கள் நம் வசனங்களை பொய்ப்பித்து இன்னும் (அவற்றை புறகணித்து) பெருமையடித்தார்களோ, நிச்சயமாக அவர்களுக்கு வானத்தின் (அருள்) வாயில்கள் திறக்கப்படமாட்டா, மேலும், ஊசியின் காதில் ஒட்டகம் நுழையும் வரையில் அவர்கள் சுவனபதியில் நுழையமாட்டார்கள். இவ்வாறே குற்றம் செய்வர்களுக்குக் கூலி கொடுப்போம்.”                  (திருக்குர் ஆன் : 7.40)
அதன் பின் இவனுடைய பெயரை பாவிகளின் பெயர்களை பதியும் (ஸிஜ்ஜீன்) என்ற ஏட்டில் எழுதி பூமியின் அடிவாரத்தில் அந்த உயிர் எடுத்து செல்லப்படும் என்று நபி(ஸல்) கூறினார்கள்.  ( நூல் : அபூதாவூது. நஸயி,அஹமது, ஹக்கிம்.)
குற்றவாளிகளின் ஏடு ஸிஜ்ஜீனில் உள்ளது. ஸிஜ்ஜீன் என்பது என்னவென உமக்கு எப்படி தெரியும் ? (அது பாவிகளின் செயல்கள்) பதிவு செய்யப்பட்ட புத்தகம்”. (திருக்குர் ஆன் 83:7-9)

நல்லவர்களின் உயிரின் நிலை :
நல்லவர்களின் உயிர் பிடுங்கப்பட்டவுடன் அதை சுவனத்து துணியிலும்  நறுமணத்திலும் வைத்து விடுவார்கள். அதிலிருந்து கஸ்தூரி வாடை வீசும், அதை சுமந்தவர்களாக முதலாவது வானத்தை நோக்கி சென்று வானத்தை திறந்து விடுமாறு அதிலுள்ள மலக்குகளிடம் கூறுவார்கள். அங்கே உள்ள வானவர்கள் வானத்தின் வழியை திறப்பார்கள். இவ்வாறு ஒவ்வொரு வானத்தின் ஆத்மாவுக்காக இறைவனிடம் பிராத்தனை செய்வார்கள். கடைசியாக ஏழாவது வானத்திற்கு அந்த ஆத்மா சென்றது.ம், எனது நல்லாடியார்களின் உயிரை இல்லய்யூன் எனும் (நன்மை செய்தோரின் பட்டியல்) ஏட்டில் எழுதுங்கள் என்று அல்லாஹ் கூறுவான் என்று நபி(ஸல்) கூறினார்கள்.
நிச்சயமாக நல்லோர்களின் செயலேடு இல்லிய்யீனில் இருக்கும். இல்லிய்யீன் என்பது என்னவென்று (நபியே!) உமக்கு அறிவித்தது எது? (அது நல்லோர்களின் செயல்கள்) பதியப்பட்ட புத்தகம்” (திருக்குர் ஆன் 83:18:-20)

ஜனாஸாவை சுமந்து செல்லும் போது மைய்யத்கூறுவது :
 நபி(ஸல்) கூறினார்கள் : ஜனாஸாவை (பெட்டியில்) வைக்கப்பட்டு அதை ஆண்கள் தங்கள் தோள்களில் சுமந்து செல்லும் போது அந்த மைய்யத் நல்லறங்கள் புரிந்ததாக இருக்குமானால் என்னை விரைந்து கொண்டு செல்லுங்கள், என்று கூறும். அது நல்லறங்கள் புரியாததாக (கெட்ட மைய்யத்தாக) இருக்குமானால், கைசேதமே! என்னை எங்கே கொண்டு செல்கிறீர்கள்? என்று கூறும். இவ்வாறு கூறும் சப்தத்தை மனிதனைத் தவிர அனைத்தும் செவியுறும். மனிதன் அதைச் செவியுற்றால் மயங்கி விழுந்து விடுவான். (அறிப்பவர் : அபூஸயீதுல்குத்ரி(ரலி) நூல் : புகாரி 1380)

கெட்டவர்களுக்கு கப்ரில் கேள்வியும் பதிலும் :
கெட்ட அடியார்களை கப்ரில் அடக்கம் செய்யப்பட்டு அனைவரும் திரும்பியவுடன் அந்த மைய்யத்திற்கு மீண்டும் உயிர் கொடுக்கப்பட்டு இரண்டு வானவர்கள் அவனை எழுப்பி அமரச் செய்து பின்வருமாறு கேள்வி கேட்பார்கள்.

கேள்வி : உமது இறைவன் யார்? பதில் : ...... ...... எனக்குத் தெரியாது.
கேள்வி : உமது மார்க்கம் என்ன? பதில் : ...... ...... எனக்குத் தெரியாது.
கேள்வி : உன்னிடத்தில் (மார்க்கத்தை போதிக்க அனுப்பட்ட மனிதர் யார்? பதில் : ...... ...... எனக்குத் தெரியாது.
                   (மேற்சென்னவாறு அனைத்துக் கேள்விகளுக்கும் தனக்குத் தெரியாது...... தெரியாது...... என்றே பதில் சொல்லுவான்) இவன் பொய் சொல்லுகிறான். நரகத்தில் விரிப்புகளை இவனுக்காக (கப்ரில்) விரித்து விடுங்கள்; நரகத்தின் பக்கம் ஒரு கதவை இவனுக்காகத் திறந்து விடுங்கள்என்று கூறக்கூடிய ஒசையொன்று அப்போது வானிலிருந்து வரும் என நபி(ஸல்) கூறினார்கள்.

                                      ( நூல் : ஹக்கிம், இப்னுமாஜா, அஹ்மத், அபூதாவூது)

நல்லவர்களுக்கு கப்ரில் கேள்வியும், பதிலும் :
                   நல்லடியார்கள் கப்ரில் அடக்கம் செய்யப்பட்டு அனைவரும் திரும்பியவுடன் (முங்கர், நக்கீர் என்ற) இரண்டு மலக்குகள் வந்து அவனை எழுந்திருக்கச் செய்து அமர மைப்பார்கள் அவர்கள் அந்த அடியானை நோக்கிப் பின்வருமாறு கேள்விகள் கேட்பார்கள்.
கேள்வி : உமது இறைவன் யார்? பதில் : எனது இறைவன் அல்லாஹ்.
கேள்வி : உமது மார்க்கம் என்ன? பதில் : எனது மார்க்கம் இஸ்லாம்.
கேள்வி : : உன்னிடத்தில் (மார்க்கத்தை போதிக்க அனுப்பட்ட மனிதர் யார்? பதில் : அல்லாஹ்வுடைய ரசூல் முஹம்மது (ஸல்)
கேள்வி : நீ அதனை எவ்வாறு அறிந்து கொண்டாய்?
பதில் : அல்லாஹ்வுடைய வேதத்தை ஓதினேன்ன்; அதனை விசுவாசம் கொண்டேன்; அதனை உண்மைப் படுத்தினேன்.
          “எனது அடியான் உண்மையுரைத்துவிட்டான். அவனுக்காகச் சுவர்க்கத்தின் விரிப்புகளை விரித்து விடுங்கள்என்று கூறக்கூடிய ஒசையொன்று அப்பொழுது வானிலிருந்து வரும் அவனுடைய கண் விசாலமாக்கப்படும் என நபி(ஸல்) கூறினார்கள்.
( நூல் : ஹக்கிம், இப்னுமாஜா, அஹ்மத், அபூதாவூது)

கப்ரில் கெட்டவர்களுக்கு கிடைக்கும் தண்டனை :
          நரகத்திலிருந்து உஷ்ணமும், விஷக்காற்றும் அவனுடைய கப்ருக்குள் வீசும். அவனுடைய வலது இடது விலா எலும்புகள் ஒன்றுடன் ஒன்று பிண்ணி விடுமளவு கப்ரு அவனை நெருக்கும்.
அழுக்கான ஆடையும், அவலட்சணமான முகமும் கொண்ட துர்வாடை வீசக்கூடிய ஒரு மனிதன் அவனிடம் வருவார். அம்மனிதன் அவனை நோக்கி, “ உனக்கு வாக்களிக்கப்பட்ட, கேடு உண்டாக்ககூடிய இந்நாளை உனக்கு நான் ( நினைவூட்டிநன்மாராயம் கூறுகிறேன்என்பான். அப்பொழுது அவன் அவலடசணமான இந்நிலையில் இருக்கும் நீ யார்? என்று அம்மனிதனை  நோக்கிக் கேட்பான். “ நான் தான் உனது தீய செயல்கள்என்று அவன் பதிலளிப்பான். அதனை தொடர்ந்துஇறைவனை! நீ மறுமையை உண்டாக்காதே!” என்று புலம்ப ஆரம்பித்து விடுவான். (அறிவிப்பவர் : பராஉ இப்னு ஆஸிப்(ரலி) நூல்கள் : அஹ்மத், அபூதாவூத், ஹக்கிம்)
          மேலும், “கெட்டவனுடைய (கப்ரில்) தலைப்பக்கமாக ஒரு பாம்பும் கால் பக்கமாக ஒரு பாம்பும் சாட்டப்படும். அவை மறுமை நாள் வரை அந்தப் பாவியைத் தீண்டிக் கொண்டே இருக்கும்என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர் : ஆயிஷா(ரலி) நூல் : அஹ்மத்)

கப்ரில் நல்லவர்களுக்கு கிடைக்கும் பரிசுகள் :
அப்போது நறுமணம் கமழ அழகிய ஆடை அணிந்து வசீகரமான தோற்றத்துடன் ஒரு மனிதர் அவரிடத்தில் வருவார். அம்மனிதர் அவரைஉனக்கு வாக்களிக்கப்பட்ட- உன்னை மகிழவூட்டக்கூடிய ஒரு நன்னாள் இதுவாகும்என்று கூறுவார். அந்த மூமின் அம்மனிதர் நோக்கிநீர் யார்? என்று கேட்பார். அப்போது அம்மனிதர்நான் தான் ( நீ உலகில் தேடி வைத்த) உனதுஸாலிஹான அமல்கள்’ (அல்லாஹ் இந்த உருவத்தில் உன்னிடம் என்னை அனுப்பி வைத்தான்)” என்று கூறுவான். அப்பொழுது அந்த மூமின்அல்லாஹ்வே! எனது குடும்பத்துடனும் நான் தேடி வைத்திருந்த என்னுடைய அமல்களுடன் சென்றடைய  மறுமையை உண்டாக்குவாயாக!” என்று கூறுவார். மரண வேளையின் போது ஒரு மூமினுடைய நிலை இதுவாகும். (பதாஉ இப்னுஆஸிப்(ரலி) நூல்கள் : அஹம்து, அபூதாவூத், ஹக்கிம்)

நல்லடியார் கப்ரின் நிலை :
நல்லடியார் கப்ர் 70 முழம் அளவிற்கு விஸ்தரிக்கப்படும் (மறுமை நாளில்) அவர்கள் எழப்பப்படும் வரை அதன் மீது பச்சை பசுமையாக ஆக்கப்படும். (அறிவிப்பவர் : கதாதா(ரலி) நூல் : முஸ்லிம்)

கப்ரில் மைய்யத்திற்கு (சொர்க்கம், நரகம்) காட்டப்படும் :
          நபி(ஸல்) கூறினார்கள் : உங்களில் ஒருவர் இறந்துவிட்டால் அவர்  தங்குமிடம் (கப்ரில்) அவருக்கு காலையிலும் மாலையிலும் எடுத்துக்காட்டப்படும். அவர் சொர்க்கவாசியாக இருந்தால் சொர்க்கத்தில் இருப்பதாகவும் நரகவாசியாக இருந்தால் நரகத்தில் இருப்பதாகவும் (எடுத்துக்காட்டப்படும்) மேலும் அல்லாஹ் மறுமை நாளில் உன்னை எழுப்புகின்றவரை இதுவே (கப்ரே) உன் தங்குமிடம் என்றும் கூறப்படும். (அறிவிப்பவர் : அப்துல்லாஹ் பின் உமர்(ரலி) ) நூல் : புகாரி 1379)

          அன்புள்ளம் கொண்ட இஸ்லாமிய சகோதர சகோதரிகளே! மேலே குறிப்பிட்டபடி, ரசூல் (ஸல்) கட்டளைப்படி நல்லடியார்களின் பட்டியல் உங்கள் உயிர் பறிக்கப்பட வேண்டுமா? அல்லதுஜ் கெட்ட அடியார் பட்டியலில் உங்கள் உயிர் பறிக்கப்பட வேண்டுமா? என்பதை இப்போது உயிரோடு இருக்கும் நீங்கள் முடிவு செய்யுங்கள். நீங்கள் செய்ய வேண்டியது என்ன? இறைவன் கூறுகிறான்.

          “ நீங்கள் (அல்லாஹ்வுக்கு) நன்றி செலுத்திக் கொண்டும், (அவன் மீது) நம்பிக்கை கொண்டுமிருந்தால், உங்களை வேதனை செய்வதால் அல்லாஹ் என்ன இலாபம் அடையப்போகிறான்...” (திருக்குர் ஆன் 4:147)
          “ நீங்கள் அறியாத விதத்தில் திடரென உங்களிடம் வேதனை வரும் முன்னரே, உங்கள் இறைவனால் உங்களுக்கருளப்பட்ட (இறைவேதம், இறைத்தூதர் போதனைகள்) அழகானவற்றைப் பின்பற்றுங்கள் ”  (திருக்குர் ஆன் 39:55)

          அல்லாஹ்வுக்கும், அவனுடைய ரசூலுக்கும் அஞ்சி நடந்து கொள்ளுங்கள்.”


குறிப்பு :
                   இந்த செய்திகள் மரண சிந்தனை என்ற துண்டு பிரசுரத்தில் இருந்து எடுக்கப்பட்டது. இது எங்களுடைய சொந்த கருத்துக்கள் இல்லை. இதில் எதேனும் எழுத்துப் பிழைகள், செய்திகளில் பிழைகள் அல்லது மாற்றுக் கருத்துகள் இருந்தால் தெரிவிக்கவும். வல்ல இறைவன் அல்லாஹ்வின் கட்டளைகளை மக்களுக்கு தெரிவிக்கும் விருப்பத்தில் தான் இதனை வெளியிடுகிறோம். எதேனும் கருத்துக்கள் இருந்தால் தெரிவிக்கவும். அஸ்ஸலாமு அலைக்கும்.

3 comments:

  1. இந்த வலைமனையை(blog) உங்கள் நண்பர்கள், உறவினர்கள் மற்றும் இறை நேசம் உள்ள நல்ல உள்ளங்களிடம் பகிர்ந்து கொள்ளுங்கள்.

    உங்களின் அன்பும்,ஆதரவும் என்றும் எங்களுக்குத் தேவை.

    அஸ்ஸலாமு அலைக்கும்.

    ReplyDelete
  2. அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்
    பயனுள்ள கட்டுரை
    கட்டுரையின் ஆரம்பத்தில் இரண்டாவது உள்ள வசனத்தின் அத்தியாயம் எண் தவறாக உள்ளது. 67:2 அதை மட்டும் திருத்தம் செய்ய வேண்டும்.

    அல்லாஹ் உங்களுக்கு அருள்புரிவானாக!

    ReplyDelete
  3. அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்
    பயனுள்ள கட்டுரை
    கட்டுரையின் ஆரம்பத்தில் இரண்டாவது உள்ள வசனத்தின் அத்தியாயம் எண் தவறாக உள்ளது. 67:2 அதை மட்டும் திருத்தம் செய்ய வேண்டும்.

    அல்லாஹ் உங்களுக்கு அருள்புரிவானாக!

    ReplyDelete