Thursday 26 January 2012

கஃபா


இதன் முழுப்பெயர் கஃபத்துல்லாஹ் ஆகும். இது மக்காவிலுள்ள இறை இல்லத்துக்குச் சொல்லப்படும். கஃபா என்றால் அரபி மொழியில் சதுர வடிவானது என்று பொருள். இதற்கு பைத்துல் ஹரம் (கண்ணியமிக்க இரத்தம் சிந்துதல் நிகழக்கூடாத, பாதுகாப்பான வீடு) என்றும் பெயர். அல்லா இதனை வானம், பூமி இவற்றை படைப்பதற்கு இரண்டாயிரம் ஆண்டுகள் முன்பே படைத்தார் என அபூ ஹூரைரா (ரலி) கூறுகிறார். கட்டிடமாக இல்லாமல் மணல் மேடாக இருந்தது. ஆதிமனிதர் ஆதம் அவர்கள் உலகில் இறக்கப்பட்டதும் அல்லாவின் ஆணைப்படி அதில் கட்டிடம் கட்டினார்கள். ஷிது நபி அவர்கள் நான்குபுறமும் சுற்றுச்சுவர் எழுப்பினார்கள். அடுத்து நூஹ் அவர்கள் காலத்தில் ஏற்பட்ட வெள்ளத்தால் அழிந்தும் அடையாளமாக சிவப்பு நிற மணல் மேடு அங்கேயே இருந்தது. நபி இப்ராஹிம் அவர்கள் அல்லா ஆணைப்படி கஃபாவைக் கட்டினார்கள். எமன் நாட்டு மன்னர் துப்பவு அஸத் முதன் முறையாக கஃபா மீது போர்வை போர்த்தி கவுரவித்தார். மக்கள் இதை புனித இறையில்லமாகக் கருதியதைக் கண்ட எமன் நாட்டு மன்னன் படையெடுத்து இந்த இடத்தை அழிக்க முயன்றான். ஆனால் அல்லா சிறு பறவைகளின் வாயில் கற்களை வைத்து வீசி யானைப்படையை அழித்துவிட்டான்.

கி.பி 631ல் மக்கா வெற்றி கொள்ளப்பட்டு முற்றிலும் முஸ்லிம்கள் வாழும் பகுதியாக மாறியது. உலக மக்கள் யாவரும் ஹஜ் செய்யும் இடமாக இருக்கிறது. கஃபா பல மன்னர்களால் விரிவுபடுத்தப்பட்டது. கடைசியாக ஹிஜ்ரி 1040ல் துருக்கி ஆட்சியின் போது ரிஸ்வான் ஆகா என்ற இன்ஜினியர் மற்றும் இந்திய கட்டிட கலை மஹ்மூது ஆகியோரால் கட்டப்பட்டது.
கருங்கல்லால் கட்டப்பட்ட கஃபாவின் உயரம் 50 அடி, நீளம் 40 அடி, அகலம் 25 அடியாகும். ருக்னுல் அஸ்வத், ருக்னுல் யமானி, ருக்னுஷ் ஷாமி, ருக்னுல் இராக்கி ஆகிய நான்கு மூலைகள் உள்ளன. 96 வாசல்கள் இதை சூழ்ந்துள்ளன. 9 மினாராக்கள் உள்ளன. எந்த நேரமும் எல்லா வாசல்களும் திறந்திருக்கும்.




No comments:

Post a Comment