Thursday 26 January 2012

ஸஃபா-மார்வா

 
இது கஃபாவுக்கு மிக அருகிலுள்ள இரு குன்றுகளின் பெயராகும்.

ஆதம் ஸஃபியுல்லாஹ் (அலை) அவர்கள் ஸஃபா மலை மீது உட்கார்ந்ததால் ஸஃபா என்றும் ஹவ்வா (அலை) அவர்கள் மர்வா மலை மீது உட்கார்ந்ததால் மர்வா (பெண்)-மனைவி) என்றும் பெயர் எற்பட்டது. அரபிகள் இரு மலைகளிலும் அஸஃப், நாயிலா என்ற சிலைகளை வைத்து தொங்கோட்டம் ஓடித்தொட்டு வந்தனர் என்றும் பின்னர், அரபிகள் இஸ்லாத்தை ஏற்றதால் அச்சிலைகள் அகற்றப்பட்டன என்றும் வரலாறு கூறுகிறது. பின்னர் அதில் தொங்கோட்டம் ஓடுவதில் மக்கள் ஐயமுற்றபோது அல்லாஹ் அதனால் குற்றமில்லை என்று  செய்தி அனுப்பினான்.


 
மேலும் சுமார் 5000 ஆண்டுகளுக்கு முன் நபி இப்ராஹீம் அவர்கள் தங்கள் மனைவி ஹாஜரா, குழ்ந்தை இஸ்மாயீல் இருவரையும் அல்லாவின் விருப்பப்படி இங்கே விட்டு விட்டுச்சென்றார். மனிதர்கள் அற்ற பாலைவனமாக இருந்த இந்த இடத்தில் குழந்தை இஸ்மாயீலைப்படுக்க வைத்துவிட்டு ஸஃபா-மர்வா மலைகளுக்கிடையே தண்ணீரைத்தேடி அன்னை ஹாஜரா அவர்கள் இங்குமங்கும் ஓடினார்கள். இவ்வாறு ஏழுதடவை ஓடி இறைஞ்சியதால் அல்லாஹ் அவர்கள் து ஆவை ஏற்றுக் கொண்டு குழந்தையின் காலடியில் ஜம்ஜம் நீரைத் தந்தார்.

எனவே அதன் நினைவாக ஹஜ்ஜோ, உம்ராவோ செய்யக்கூடியவர்கள் ஸஃபா-மர்வா இடையே ஏழு தடவை தொங்கோட்டம் ஓடுவது வழக்கமாக்கப்பட்டது. இதற்குஸயீஎன்று பொருள்.

ஸஃபா-மர்வா என்பது சொர்க்கத்தின் இரு வாசல்களாகும். இங்கு து ஆக்கள் ஏற்றுக் கொள்ளப்படும் என்று நபி கூறியுள்ளார். இரு மலைகளுக்கிடையே ஆயிரக்கணக்கான நபிமார்கள் அடங்கியுள்ளனர் என்று சொல்லப்படுகிறது.

No comments:

Post a Comment