Monday 6 February 2012

ஹஜருல் அஸ்வத்



கரு நிறக்கல் என்பது இதன் பொருள். கருஞ்சிவப்பு நிறமுடைய இது அரை வட்ட வடிவமுள்ள ஆறு அங்குல உயரமும் எட்டு அங்குல அகலமும் உடையது. தண்ணீரில் மிதக்கும் தன்மையுடைய இதனை ஆதம் நபி அவர்கள் விண்ணகத்திலிருந்து கொண்டு வந்தார் என்றும், பாலைவிட வெண்மையாக இருந்த இது ஆதமுடைய மக்களின் பாவக் கரங்கள்பட்டு கரு நிறமாகிவிட்டது. என்றும் நபி அவ்ர்கள் கூறியுள்ளார்கள். நூல் : திர்மிதி. ஒளி பாய்ந்த இடம் வரை புனித (ஹரம்) என நபி இப்ராஹிம் அவர்கள் நிர்ணயித்தார்கள் என்றும் கூறப்படுகிறது.

நூஹ் நபி அவர்கள் காலத்தில் வெள்ளப் பிரளயத்தின் போது இது ஆபூகுபைஸ் மலையில் வைத்து பாதுகாக்கப்பட்டு பின்னர் இப்ராஹிம் அவர்களால் இக்கல் கண்டுபிடிக்கப்பட்டு கஃபாவின் தென் கிழக்கு மூலையில் பதித்து கஃபாவைச் சுற்றி வருவதற்கான துவக்க இடமாக இக்கல் பதிக்கப்பட்ட மூலையைச் செய்தனர்.

பணு ஜர்ஹம் கூட்டத்தினர் மக்காவக் காலிசெய்த போது ஜம் ஜம் கிணறுக்குள் போட்டு புதைத்து விட, நபி அவர்களின் பாட்டனார் அப்துல் முத்தலிப் அவர்கள் கிணற்றைத் தோண்டும் போது இதனை கண்டெடுத்து கஃபாவில் இதற்குரிய மூலையில் பதித்தார்

நபி அவர்கள் இதனை தொட்டு முத்தமிட்டும், ஒட்டகத்தின் மேலிருந்து கைத்தடியால் தொட்டு கைத்தடி துணியை முத்தமிட்டும் உள்ளனர். மறு நாள் இதற்கு இரு கண்கள் நாவும் இருக்கும். தன்னை முத்தமிட்டவர்களை அடையாளம் காட்டும் எனவும் நபியவர்கள் கூறினர். ஹாஜிகளும் இதனை முத்தமிடலாம். நெரிசலின் போது தூரத்திலிருந்து இதன் பக்கம் கை காட்டி முத்தமிடுவது சிறந்ததாகும்.

No comments:

Post a Comment